செய்திகள் :

HBD Mohanlal: இந்த தமிழ் படங்கள் இவர் படத்தோட ரீமேக்கா? மோகன்லால் படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

post image

ஜெயிலர் படத்துல ரெண்டு சீன் வந்தாலும் தன்னோட கெத்து மேனரிஸத்தால ரெண்டு சீனையும் அள்ளி தின்னுட்டு போனவரு நம்ம லாலேட்டன் மோகன்லால்.

லால பத்தி சொல்லணும்னா, 'நம்ம ஊர்ல எப்படி நம்ம ரஜினியோ, அவுங்க ஊர் கேரள கரைல அவரு'னு சுந்தர பாண்டியன் டெம்ப்ளட்ட வச்சு சொல்லலாம். 

மாஸ் மட்டுமில்ல நடிப்புலயும் நம்மாளு ஒரு தம்புரான். சரி அப்படியாப்பட்ட மோகன்லாலோட படங்கள் எத தமிழ்ல ரீமேக் பண்ணாங்கனு பாப்போமா?

ஜெயிலர் படத்தில் மோகன்லால் | Mohanlal in Jailor Movie
ஜெயிலர் படத்தில் மோகன்லால்

மொத நம்ம சூப்பர் ஸ்டார் படங்கள்ல இருந்தே ஆரம்பிப்போம். மோகன்லாலோட மணிச்சித்திரதாழுதான் நம்ம ஊர் சந்திரமுகி.

கேரள மாநில ஆலப்புழா மாவட்டத்துல இருக்க அலும்முட்டில் தரவாடுங்குற குடும்பத்துல நடந்த உண்மை சம்பவத்ததான், அதே குடும்பத்த சேர்ந்த மது முட்டம் திரைக்கதையா எழுத ஃபாசில் டைரக்ட் பண்ணார்.

அதான் நம்ம ஃபஹத்தோட அப்பா. முழுக்க முழுக்க கங்கான்ற கதாபாத்திரம்தான் கதையோட மையம். 

ஒரு பக்கா சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர். இண்டர்வலுக்கு கொஞ்சம் முன்னாடிதான் லாலேட்டனே படத்துக்குள்ள வருவார்.

அத தமிழ்ல எடுக்கும்போது, பாம்பு, லக்க லக்க லக்க, மாட்டு வண்டி, தேவுடா தேவுடானு எல்லாத்தையும் மேலாப்ல தூவிவிட்டு, கமகமனு ஒரு மாஸ் பேக்கேஜா ரஜினிய வச்சு பி.வாசு எடுத்தார்.

மணிச்சித்திரதாழு படத்தில் மோகன்லால், சுரேஷ் கோபி | Mohanlal and suresh gobi Manichitrathazhu
மணிச்சித்திரதாழு படத்தில் மோகன்லால், சுரேஷ் கோபி

மோகன்லாலோட இன்னொரு படமான ஆறாம் தம்புரான் படத்துல வர சில சீன்களையும் (மியூஸிக் க்ளாஸ் தொடர்பா ரஜினிக்கும் நயன்தாராவுக்கு வர சண்டை) சந்திரமுகில சேர்த்துருப்பாரு.

மொத்தத்துல படம் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்புச்சு.

அடுத்து, ஒருவன் ஒருவன் முதலாளி முத்து. `தேன்மாவின் கொம்பத்து’ என்ற பேர்ல பிரியதர்ஷன் இயக்கத்துல வந்த படம்.

மோகன்லால் ஷோபனா காம்பினேஷன்ல இதுவும் வசூல் ஹிட். மோகன்லால் - பிரியதர்ஷன் காமெடி கூட்டணில வந்த பெஸ்ட் காமெடி படங்கள்ல இதுவும் ஒன்னு.

கேரள மாநில சினிமா விருதுகளையும் குவிச்சது. சாதாரண ப்ரெண்ட்ஷிப் சண்டை, முக்கோண காதல் கதைய, ரஜினிக்குனு மாத்தும் போது அதுல ஒரு மாஸான அப்பா ப்ளேஷ்பேக்க சேத்து, ஒரு பக்கா ரஜினி படமா மாத்திருப்பாரு கே.எஸ். ரவிகுமார்.

மலையாள ஒரிஜினல பாத்தீங்கனா அட இதுவா நம்ம முத்துனு ஆச்சரியப்படுவீங்க.

அடுத்து உலக நாயகன் பக்கம் திரும்பலாம். த்ரிஷ்யம்தான் நம்ம ஊர் பாபநாசம். அந்த ஊர் ஜார்ஜ் குட்டிதான் நம்ம ஊர் சுயம்பு லிங்கம்.

திரிஷ்யம் படத்தில் மோகலால், மீனா | mohanlal, meena in Drishyam Movie
திரிஷ்யம் படத்தில் மோகலால், மீனா

த்ரிஷ்யம் அந்த வருஷத்தோட அதிக வசூல் தந்த படம். ஒரு அப்பாவி ஜார்ஜ் குட்டிய வச்சு இவ்ளோ வசூலானு எல்லா மாநிலமும் வாய திறந்துச்சு.

கிட்டத்தட்ட எல்லா மொழிலயும் ரீமேக் பண்ணிட்டாங்க. அதுல சிக்கர் அடிச்சது நம்ம சுயம்பு லிங்கம்தான்.

நம்ம சுயம்புலிங்கம் ரிட்டயர்ட் ஆனாலும், ஜார்ஜ் குட்டி ரிடயர்ட் ஆகல. பார்ட் - 3 வரைக்கும் போய்க்கிட்டுதான் இருக்கார்.

செத்துப்போன வருண் பிரபாகரனே எழுந்து வந்து, 'நான் சாகல, சாகுற மாதிரி கனவு கண்டேன்'னு வாக்குமூலம் கொடுத்தாதான் நிக்கும்னு நினைக்கிறேன்.

அப்டியே அஜித் குமார் பக்கட்டு பைக்க திருப்புவோம். கிரீடம். 1989ல வந்த படம். அப்பதான் மோகன்லால் ஒரு பக்கா நடிகரா உருமாறியிருந்த நேரம்.

எழுத்தாளர் லோகிததாஸ் எழுத்து மோகன்லாலோட நடிப்பிற்கு நல்ல தீனிப் போட்டது இந்த படம். 

போலீஸ் ஆகுற கனவுல வாழ்ந்த சேதுமாதவன் க்ளைமேக்ஸ்ல கைல கத்திய வச்சுக்கிட்டு, அவுங்கப்பா திலகன் முன்னாடி கொலையாளி ஆகிட்டேனேனு கத்தி அழுவார்.

இந்த காட்சில மோகன்லாலோட நடிப்புக்கு வியக்காத ஆளே இல்ல.

கிரீடம் படத்தின் மோகன்லால் | Mohanlal in Kireedam Movie
கிரீடம் படத்தின் மோகன்லால்

லாலேட்டனோட பெஸ்ட் படங்கள்ல இதுவும் ஒன்னு. மோகன்லாலுக்கு தேசிய விருதும் கிடைச்சது.

இந்த படம்தான் அதே பேருல கிரீடம்னு தமிழ்ல வந்துச்சு. அஜித் ரசிகர்களுக்காக க்ளைமேக்ஸ் எல்லாம் மாத்தி வச்சாங்க.

மலையாள கிரீடத்துல கொச்சின் ஹனிபா நடிச்ச அதே கேரக்டர தமிழ்லயும் அவரே பண்ணார். மலையாளத்துல செங்கோல்னு கிரீடத்தோட ரெண்டாவது பார்ட் வந்துச்சு.

காக்கா குயில். நம்ம டாப் ஸ்டாரோட லண்டன் படம். பிரியதர்ஷன் - மோகன்லால் காமெடி கூட்டணியோட சிக்சர்கள்ல ஒன்னு.

இன்னசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார், கொச்சின் ஹனிபா, ஜகதீஸ், முகேஷ்னு மொத்த மலையாள சினிமாவோட காமெடி நட்சத்திரங்களும் களமிறங்குன படம். 

நான் ஸ்டாப் காமெடிக்கு கேரன்டினு சொல்லலாம். இந்த படம் சுந்தர்.சி கைல சிக்குனது யார் செய்த புண்ணியமோ, லண்டன்ற பேருல பிரஷாந்த், வடிவேலு கூட்டணில ஒரு கலக்கலான காமெடி படமா எடுத்திருப்பார்.  

ஸ்படிகம் படத்தில் மோகன்லால் | Mohanlal in Spadikam movie
ஸ்படிகம் படத்தில் மோகன்லால்

சுந்தர்.சி நடிகரா அறிமுகமான 'தலைநகரம்' படம், மோகன்லாலோட அபிமன்யு படத்தோட தழுவல்தான். அதே மாதிரி மோகன்லாலோட மாஸ் படங்கள்ல நம்பர் ஒன்னுனு சொல்லப்படுற ஸ்படிகம் படத்தை ரீமேக் பண்ணி, அதுல அவரே நடிச்சார்.

அது வரை சாக்லேட் பாய், ஃபேமிலி பாயா நடிச்சுட்டிருந்த மோகன்லாலே ஒரு ராவான ரகட் பாயா மாத்துனது இந்த படம்.

லாரி ட்ரைவரா ஆடுதோமான்ற கேரக்டர செம்ம நக்கலாவும், மாஸாவும் பண்ணிருப்பார் லாலேட்டன்.

ஒரு சீன்ல போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அவர அடிச்சு நொறுக்கிடுவாங்க. அங்க இருந்து கிளம்புறப்ப செம்ம நக்கலா, போலீஸ கலாய்க்கிற மாதிரி ஒரு நடை நடப்பார்.

லாலேட்டன் ஃபேன்ஸுக்கு அந்த சீன் ஒரு கூஸ்பம்ப். சமீபத்துல கூட ஸ்படிகம் படத்த ரீரிலீஸ் பண்ணாங்க. செம்ம ஓட்டம் ஆடுச்சு.

அடுத்து நாடோடிகட்டு. மலையாளிகளோட ஆல் டைம் ஃபேவரைட் காமெடி படம். தமிழ்ல பாண்டிய ராஜனும் எஸ்.வி.சேகரும் நடிச்சுருப்பாங்க.

மிகப்பெரிய கல்ட் க்ளாசிக்கா மாறலனாலும், பாண்டிய ராஜனோட திரை வாழ்க்கைல முக்கியமான ஒரு படமா அமைந்தது.

நாடோடிகட்டு படத்தில் ஶ்ரீனிவாசனுடன் மோகன்லால்
நாடோடிகட்டு படத்தில் ஶ்ரீனிவாசனுடன் மோகன்லால்

நாடோடி கட்டோட அடுத்த பாகங்களா, பட்டனபிரவேஷம், அக்கர அக்கர அக்கரனு ரெண்டு பாகம் வந்து கல்ட்டா ஆச்சு.

இதுக்கு எல்லாமே ரைட்டர் இந்த மூணு படங்களோட செகண்ட் ஹீரோவான ஶ்ரீனிவாசன்தான்.

மோகன்லால் - ஶ்ரீனிவாசனோட காமெடி கூட்டணிக்கு இந்த படங்கள்தான் அடித்தளம். இந்த படங்களோட ஒவ்வொரு சீனுமே ஒரு மீம் டெம்ப்ளட்டா மாறிடுச்சு.

இதுபோக, இதே மோகன்லால் - ஶ்ரீனிவாசனோட கூட்டணில வந்த உதயனானு தாரம், ப்ரித்வி ராஜ் பிரகாஷ் ராஜ் கூட்டணில வெள்ளித்திரைனு வந்துச்சு.

வியட்னாம் காலனி படம் அதே பேர்ல பிரபு - கவுண்டமணி கூட்டணில வந்துச்சு, காந்தி நகர் 2 ஸ்ட்ரீட் அண்ணாநகர் முதல் தெருவா சத்யராஜ் நடிப்புல வந்துச்சு.

மோகன்லால் - ஶ்ரீனிவாசனோட கூட்டணில வந்த படங்கள் மலையாள காமெடி படங்களுக்குனு ஒரு அளவுகோளையே செட் பண்ணுச்சு. 

அதுக்கு அப்புறம் அவுங்களுக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சுட்டாங்க. மாத்தி மாத்தி வாய் சண்டைக்கே போச்சு.

ஆனாலும், இவுங்களோட பசங்க இப்ப ஒன்னா சேர்ந்து படம் பண்ணிட்டுதான் இருக்காங்க.

உதயனானு தாரம் | udayananu tharam
உதயனானு தாரம்

இயக்குநர் சத்யன் அந்திகாடு - மோகன்லால் கூட்டணில வந்த 'சன்மனச்சுலவருக்கு சமாதானம்' படம், சிவகுமார் நடிப்புல 'இல்லம்' படமா ரீமேக் ஆச்சு.

மோகன்லால் தேசிய விருது வாங்குன பரதம் படம் நவரச நாயகன் கார்த்திக் நடிப்புல சீனுனு ரீமேக் ஆச்சு, நோக்கெத்தாதூரத்து கண்ணுனட்டு படம் பூவே பூச்சூடவானு ரீமேக் ஆச்சு.

இப்படி பெரிய லிஸ்ட்டே சொல்லலாம். வாய்ப்பு கெடச்சா இந்த படங்கள் எல்லாம் பாருங்க மக்களே..

இதுல உங்களுக்குப் பிடிச்ச படத்த கமெண்ட் பண்ணுங்க.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Mohanlal: Biography புத்தக அறிவிப்பு; பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மோகன்லாலின் ட்ரீட்!

மலையாள திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'எம்புரான்' மற்றும் 'தொடரும்' ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து மோகன்லாலின் பெர... மேலும் பார்க்க

Cannes 2025: ``அது எனக்கு பலமாக இருந்தது!'' - கேன்ஸ் பட விழாவில் ஜூரியாக பயால் கபாடியா!

78-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நேற்றைய தினம் தொடங்கியது. கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குநர் பயால் க... மேலும் பார்க்க

Dies Irae: மிரட்டும் திகிலுடன் வருகிறது `டைஸ் ஐரே' - பிரமயுகம் இயக்குநரின் அடுத்தப் படைப்பு!

2024-ம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது பிரமயுகம். இந்தப் படத்தில், மம்மூட்டியின் நடிப்பு, திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை சிறப்பாக அமைந்ததாகக்... மேலும் பார்க்க

New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!

கடந்தாண்டு வெளியான படங்களின் மூலம் ஒரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது மலையாள சினிமா. பெரிதும் எதிர்பார்க்காத நேரத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்', 'ப்ரமயுகம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக... மேலும் பார்க்க

Mysskin:`மிஷ்கினை வரவேற்கும் மலையாள திரையுலகம்' - துல்கர் சல்மான் படத்தில் ஒப்பந்தம்

திரைப்பட இயக்குநர்,தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்வேறு திரைத்துறைகளில் ஆளுமை செலுத்திவரும் மிஷ்கின் நடிகராகவும் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிராகன்... மேலும் பார்க்க