நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!
டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்களை அடித்த எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன்!
ஒரே போட்டியில் எம்.ஸ்.தோனி, சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்கள்.
43 வயதாகும் தோனி முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் 2006-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு அறிமுகமானார்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
கடந்தாண்டு முதலே எப்போது ஓய்வுபெறுவார் என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில் அதற்கான பதில் அடுத்த 6-8 மாதங்களில்தான் எனக்கே தெரியவரும் என தோனி பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரயால்ஸுக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் வீசிய பந்தில் எம்.எஸ்.தோனி சிக்ஸர் அடிப்பார்.
இந்தப் போட்டியில் தோனி 16 ரன்களுக்கு ஆட்டமிழப்பார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17.1ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.
தோனி இந்த சிக்ஸருடன் தனது டி20 கிரிக்கெட்டில் 350ஆவது சிக்ஸரை நிறைவு செய்துள்ளார்.
2013இல் தனது முதல் டி20 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சனும் 350 சிக்ஸர்களை தோனியுடன் இணைந்து நிறைவு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 542
விராட் கோலி - 434
சூர்யகுமார் யாதவ் - 368
சஞ்சு சாம்சன் - 350
எம்.எஸ்.தோனி - 350