செய்திகள் :

என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்

post image

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இறுதியாக வெளியான, ‘உசுரே நீதான்’, ’என்னை இழுக்குதடி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

தற்போது, மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிலும், ’விண்வெளி நாயகா’ என்கிற இசை வசனம் பெரிதாகக் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ. ஆர். ரஹ்மானிடம், ‘மன்னிப்பாயா? என யாரிடமாவது நீங்கள் கேட்க வேண்டுமென்றால், அது யார்? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ரஹ்மான், “எல்லாரிடமும்தான் கேட்க வேண்டும். முக்கியமாக, குடும்பத்தினரிடம். என் மகன், மகள்கள், என் முன்னாள் மனைவி என அனைவரிடமும் மன்னிப்பாயா எனக் கேட்க வேண்டும்.” என்றார்.

ஏ. ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு தன் கணவரைப் பிரிவதாகக் கடந்தாண்டு தெரிவித்தார். தற்போது, ரஹ்மான் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட்டு இருவரும் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிக்க: மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு!

ரெட்ரோ ஓடிடி தேதி!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அவர் தயாரிக்கும் பட கதாநாயகர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாம். டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, ... மேலும் பார்க்க

ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நடிகர் சுரேந்தர் நாயகனாக நடிக்கவுள்ளார். மலர், ஓவியா, திருமகள் உள்ளிட்ட சன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இவர் கவனம் பெற்ற நிலையில், த... மேலும் பார்க்க

ராமன் தேடிய சீதை தொடர் திடீர் நிறுத்தம்! ரசிகர்கள் வருத்தம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமன் தேடிய சீதை தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.ராமன் தேடிய சீதை தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொட... மேலும் பார்க்க