"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார்!
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இவர் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பின்னணி இசையையும் அமைத்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 2021 ஆண்டு தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு படத்திற்காக, சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர், இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸிடம் ரூ. 25 லட்சம் பணம் கொடுத்திருந்தாகவும், ஆனால், அவரது புதிய திரைப்படத்துக்கு இதுவரை இசை அமைக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் மேலும் தன்னுடைய பணத்தையும் கொடுக்காமல் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சமீர் அலிகான் தன்னுடைய ரூ. 25 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் இசை அமைப்பாளர் சாம் சிஎஸ் மீது பண மோசடி புகாரை அளித்துள்ளார்.
இதையும் படிக்க: சாதனை படைத்த மகாநதி தொடர்! குவியும் வாழ்த்து!