செய்திகள் :

இனி 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

post image

சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

பிரதான சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், போக்குவரத்து காவலர்கள் 5 வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இனி அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

என்னென்ன விதிமீறல்கள்?

1. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்

2. இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது

3. போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட (நோ என்ட்ரி) பகுதியில் வாகனம் ஓட்டினால்

4. அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்

5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்

மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி

விழுப்புரம் மாவட்டம், அரசூர் மலட்டாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூரைச் சேர்ந்த பழனி... மேலும் பார்க்க

செங்கல் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிட... மேலும் பார்க்க

ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீ... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம்: தமிழக அரசு விளக்கம்!

அடையாறு நதியஒ சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அவசியம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கோடை வெய்யிலின் ... மேலும் பார்க்க

இறந்த யானை வயிற்றில் குட்டி யானை.. வனக் கால்நடை மருத்துவர்கள் விளக்கம்

கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள், புழுக்கள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த நிலையில், யானையின் உடல்கூறாய்வின்போதுதான்,... மேலும் பார்க்க