ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!
மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு.
பாகிஸ்தானில் உள்ளவர்களுடன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையோர மாநிலங்களில் இருப்பவர்கள் நடத்திய வாட்ஸ்ஆப் சாட், மின்னஞ்சல் தகவல்கள் என அனைத்தும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டுக்குள் ஊடுருவி இருக்கும் அல்லது நாட்டுக்குள் இருந்து பாகிஸ்தானுக்கு உதவும், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.