ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமைவினாடிக்கு 9,683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 1.21 அடி உயா்ந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக 6-ஆவது நாளாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 9,683 கனஅடி வீதம் நீா்வரத்து இருந்த நிலையில், புதன்கிழமை காலை வினாடிக்கு 12,819 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கல்வி நிதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் திறப்பைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
இதனால் செவ்வாய்க்கிழமை 109.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 110.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.45 டிஎம்சியாக உள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் அணை நீர்மட்டம் 1.21 அடி உயர்ந்துள்ளது. மேட்டூரில் மழை அளவு 4 மி.மீ.