செய்திகள் :

Doctor Death: சிறையிலிருந்து தப்பிய சீரியல் கில்லர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கைது!

post image

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேரை கொலை செய்திருக்கிறார்.

கொலை செய்தவர்களை உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் உள்ள ஹசாரா கால்வாயில் இருக்கும் முதலைகளுக்கு உணவாக போட்டிருக்கிறார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

தேவேந்திர சர்மா
தேவேந்திர சர்மா

இந்த ஏழு தனித்தனி வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குர்கான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, ``BAMS (ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை) பட்டம் பெற்ற தேவேந்தர் சர்மா, முதன்முதலில் இவர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போதே 125 பேருக்கு சட்டவிரோதமாக அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் 2004-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் முன்னெடுத்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதானல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

போலியாக கார், லாரி போன்ற வாகனங்களை புக் செய்து, ஓட்டுநர்களை கொன்று அவர்களின் வாகனத்தை சந்தையில் விற்கும் கொடூரச் செயலை செய்துவந்திருக்கிறார். 2002 - 2004 க்கு இடையில் பல டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். இவர் மீது கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை என 27 வழக்குகள் இருக்கிறது.

தேவேந்திர சர்மா
தேவேந்திர சர்மா

50-க்கும் மேற்பட்ட கொலைகளில் இவர் ஈடுபட்டிருக்கிலாம் என கூறப்படுகிறது. அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இவர் டாக்டர் டெத் என்றப் பெயரில்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.

ஆகஸ்ட் 2023-ல் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தபோது பரோலில் வெளியே வந்தார். அப்போது காவல்துறையிடமிருந்து தப்பிவிட்டார். அவரை காவல்துறை தேடி வந்தது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் இருக்கும் ஆசிரமத்தில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை தற்போது கைது செய்திருக்கிறோம்" என்றார்.

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 - ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்கும... மேலும் பார்க்க

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின்... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடம... மேலும் பார்க்க

விவாகரத்தான, கணவனை இழந்த பெண்கள் டார்கெட் - 100 பெண்களிடம் திருமண ஆசை காட்டி பணமோசடி செய்த நபர்

மும்பை எல்.டி மார்க் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பெண் ஆசிரியைக்கு மெட்ரிமோனியல் தளம் மூலம் கொரோனா காலத்தில் வினீத் மல்ஹோத்ரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பேச... மேலும் பார்க்க

குழந்தை இல்லாததால் மறுமணம் செய்த கணவன்; மருமகளை கொன்று, விபத்து நாடகமாடிய மாமனார்-மாமியார் கைது

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. ரேணுகாவுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், அவருக்கு குழந்தை ப... மேலும் பார்க்க

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்த... மேலும் பார்க்க