Thug Life: "நாங்களே Gen Z தான்!" - மணிரத்னம் கொடுத்த தக் பதில்
குழந்தை இல்லாததால் மறுமணம் செய்த கணவன்; மருமகளை கொன்று, விபத்து நாடகமாடிய மாமனார்-மாமியார் கைது
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.
ரேணுகாவுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், சந்தோஷ்-க்கு அவருடைய பெற்றோர்களான கமண்ணாவும் - ஜெயஶ்ரீயும் வேறொருப்பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் கர்பமாகியிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று காவல்நிலையத்துக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய ஒருவர், ஒருப்பெண் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், இறந்தவரை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில் காவல்துறை விசாரணையில், இறந்தவர் ரேணுகா தேவி என்பது தெரியவந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது, ரேணுகாவின் மாமனார் கமண்ணா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, ``சந்தோஷ்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தப் பிறகு ரேணுகாவை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கோயிலுக்கு சென்ற ரேணுகாவை அழைத்துவர கமண்ணாவும், ஜெயஶ்ரீயும் சென்றிருக்கின்றனர்.
மூவரும் ஒரே பைக்கில் ஏறி வந்த போது மூன்றாவதாக அமர்ந்திருந்த ரேணுகாவை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

அப்போது ரேணுகாவின் சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கின்றனர். இதை மறைக்க விபத்துப்போல மாமனாரும் மாமியாரும் சித்தரித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஜெயஶ்ரீயையும், கமண்ணாவையும், ரேணுகாவின் கணவர் சந்தோஷையும் கைது செய்திருக்கிறோம்.
சம்பவம் நடந்த அடுத்த 6 மணி நேரத்திற்குள் அது ஒரு கொலை என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்." எனத் தெரிவித்திருக்கிறார்.