செய்திகள் :

அரசுப் பேருந்து - டெம்போ வேன் விபத்து: 6 பேர் பலி

post image

தஞ்சாவூர் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த தனியார் டெம்போ வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை அடுத்த செங்கிப்பட்டி அருகில் சாலை மேம்பாட்டு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் கர்நாடக மாநிலத்தில் வேளாங்கண்ணிக்கு செல்வதற்காக தஞ்சை நோக்கி வந்த தனியார் டெம்போ வேணும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் டெம்போ வேனில் சிக்கி இருப்பவர்களை அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சேர்ந்து மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டெம்போ வேன் என்பதால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் வெளிவரவில்லை. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

மரங்களைக் காப்பாற்றுங்கள்!

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின் பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை அகலப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை ... மேலும் பார்க்க

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே ந... மேலும் பார்க்க

கோடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆத்தூர் ரமேஷ் ஆஜர்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆத்தூர் ரமேஷ் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்... மேலும் பார்க்க