செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்!

post image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 7-ஆவது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12,819 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை வினாடிக்கு 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்து - டெம்போ வேன் விபத்து: 6 பேர் பலி

நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 110.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை காலை 110.77 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.50 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.44 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை ... மேலும் பார்க்க

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே ந... மேலும் பார்க்க

கோடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆத்தூர் ரமேஷ் ஆஜர்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆத்தூர் ரமேஷ் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு அதிரடியாக ரூ.1,760 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் ரூ.360 உயர்ந்து ரூ.71,800-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக விலை குறைந்து வந்த தங்க... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

திருக்குவளை: கோடியக்கரை அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறிமீன்பிடி வலைகளை அறுத்து நடுக்கடலில் வீசி இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கோடியக... மேலும் பார்க்க