Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இ...
விளம்பர பலகைகளுக்கு இணையதளத்தின் மூலம் அனுமதி: மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு இனி இணையதளம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்றிப்பு:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு மாநகராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதில் தேவையான ஆவணங்களை நேரடியாக அலுவலகம் வந்து சமா்ப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், இம்முறையை மாற்றி இணையதளம் மூலம் அனுமதி பெறும் நடைமுறை புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியின் இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பித்து விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.