செய்திகள் :

Dhoni : 'பெருமைக்காக ஆடி எந்தப் பலனும் இல்லை' - டாஸில் தோனி பளிச் பேச்சு

post image

'சென்னை vs ராஜஸ்தான்!'

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார்.

Dhoni
Dhoni

'பெருமைக்காக ஆடி பலனில்லை!'

டாஸில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியதாவது, 'நாங்கள் ஏற்கெனவே அடுத்த சீசனுக்கான வேலையைத் தொடங்கிவிட்டோம். பேட்டிங் ஆர்டரில் யார் யாரை எந்த ரோலில் அடுத்த சீசனில் இறக்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். பவர்ப்ளேயில் வீச எங்களுக்கு இன்னும் ஒரு பௌலர் தேவைப்பட்டுகிறார்.

மற்ற இடங்களில் நாங்கள் நன்றாகவே வீசியிருக்கிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாகவே பேட்டிங் ஆடியிருக்கிறோம். நாங்கள் இந்த சீசனை விட்டு வெளியேறிய உடனேயே அடுத்த சீசனைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். பெருமைக்காக சகாப்தத்துக்காக சில போட்டிகளை வெல்ல வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

Dhoni
Dhoni

அடுத்த சீசனுக்கான விடைகளைத் தேடியே எங்களின் நோக்கத்தை வைத்துக் கொண்டோம். இதுவரை கொஞ்சம் தயங்கி தயங்கி ஆடியிருப்பார்கள். இப்போது ஆடும் போட்டிகளில் எந்த அழுத்தமும் இல்லை. அதனால் சுதந்திரமாக ஆடலாம்.' என்றார்.

CSK vs RR: தோனி செய்த 3 தவறுகள்; தோல்வியுற்ற CSK - விரிவான அலசல்

'சென்னை தோல்வி!'ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தத... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: 'நான் அழவே இல்ல, என்ன நடந்ததுன்னா' - விளக்கும் வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார். லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் ... மேலும் பார்க்க

Dhoni : 'I Don't Know' - தோனியின் எதிர்காலம் குறித்து ப்ளெம்மிங்கின் 'நறுக்' பதில்

'ப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ள... மேலும் பார்க்க

LSG vs SRH: `தொடரின் தொடக்கத்தில் நன்றாகத்தான் விளையாடினோம், ஆனால்..' -தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னோ அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ அணி தோல்வியுற்று பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய லக்... மேலும் பார்க்க

LSG vs SRH : 'மைதானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட வீரர்கள்!' - என்ன நடந்தது?

'லக்னோ vs ஹைதராபாத்'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையே லக்னோவைச் சேர்ந்த திக்வேஷ் சிங்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபி... மேலும் பார்க்க

"கோப்பை வென்ற Shreyasக்குப் பாராட்டு இல்லை; ஆனா வெளியே உட்கார்ந்திருந்தவருக்கு..." - கவாஸ்கர் பளீச்

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலானப் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்க... மேலும் பார்க்க