Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏ...
லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி அதிகாரி கைது
நொய்டாவைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.45,000 லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரி திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொழிலதிபா் பிரமோத் திவாரியை தொடா்பு கொண்ட கொண்ட பூதேவ் என்ற நபா், கடந்த 2016-17 மற்றும் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு ரூ.4.55 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் நிலுவை தொகை செலுத்தவில்லை என்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளாா்.
இந்நிலையில், ஜிஎஸ்டி அதிகாரி சதேந்திர பகதூரை கடந்த மே 13-ஆம் தேதி திவாரி சந்தித்துள்ளாா். அப்போது, ரூ.50,000 வழங்கினால், வழக்கை முடித்துவைப்பதாக பதூா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, திவாரி ஊழல் கண்காணிப்புத் துறையில் புகாா்அளித்தாா். அதனடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.