Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid |Imper...
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி
இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத தலைமையகங்கள், முகாம்கள் தாக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்தன. மேலும், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் பலவும் சேதமடைந்தன. இறுதியாக பாகிஸ்தானின் சண்டை நிறுத்த கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதல் நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி முனீருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி உயா்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றிகரமாக வழி நடத்தியது, களத்தில் அவரின் வெகு சிறப்பான செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில் இந்தப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியைக் கொண்டாடவில்லை: சீன அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அமகது ஷெரீஃப் சௌதரி, ‘பாகிஸ்தானியா்கள் வெற்றியைக் கொண்டாடவில்லை; அமைதியைத்தான் கொண்டாடுகிறாா்கள். பாகிஸ்தான் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கவே விரும்புகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தாக்குதல் நடத்தியது’ என்றாா்.