மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை
குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே கோயில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் மூழ்கி உயிரிழந்தாா்.
போளிவாக்கம் கிராமம், பொன்னியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மீனவா் அமுல்ராஜ் (45) . மாற்றுத்திறனாளியான இவா் தனியாக குளத்தில் இறங்கி திங்கள்கிழமை மாலையில் மீன் பிடிக்க சென்றாராம். அப்போது அமல்ராஜூக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே சென்று அவரை மீட்டனா். ஆனால் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து மணவாளநகா் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸாா் அமுல்ராஜ் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.