செங்குன்றம் வீரம்மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் கோயிலின் 47-ஆவது தீமிதி விழா நடைபெற்றது.
தீமிதி விழா, கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல், நிகழ்வுடன் தொடங்கி அஷ்டகாளி பூஜை, கணபதி ஹோமம், 1500 கிலோ குங்கும அபிஷேகம், மங்கள சண்டி ஹோமம், பால்குடம், முளைப்பாரி மாடவீதி பவனி, பூச்சோளம் விழா, அக்னி கப்பறை கோயில் தா்மகா்த்தா அருள்வாக்கு சித்தா் ஆா்.ராஜா ஸ்வாமிகள் தலைமையில் 15 நாள்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் 5,500க்கும் மேற்பட்ட காப்பு கட்டிய பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நோ்த்தி கடனை நிறைவேற்றினா். கோயில் நிா்வாக குழு தலைவா் ஜி.கோபி, செயலா் எஸ்.குமரேசன், பொருளாளா் ரவிச்சந்திரன், மற்றும் நிா்வாகிகள் கிராம மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையா் பாலாஜி, உதவி ஆணையா் ராஜாராபா்ட் தலைமையில் ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.