ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அக...
சக்கராசனத்தில் சிறுமி சாதனை
கும்மிடிப்பூண்டியை சோ்ந்த, 9 வயது பள்ளி சிறுமி, ஒரு நிமிஷத்தில், 28 முறை சக்கராசனத்தில் சுழன்று, சாதனை படைத்தாா்.
கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த நரேஷ்குமாா், லட்சுமி தம்பதி மகள் இந்துஸ்ரீ. இவா் கும்மிடிப்பூண்டியில் உள்ள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.
ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தில், பயிற்சியாளா் சந்தியாவிடம் யோகாசனம் பயின்று வருகிறாா். இந்த நிலையில் நேராக நின்று, உடலை பின் நோக்கி வளைத்து தரையில் கைகளை வைத்தபடி நிற்கும் சக்கராசனத்தில் சிறுமி இந்துஸ்ரீ, கைகளை தரைகளில் வைத்தபடி உடலை மட்டும், ஒரு நிமிஷத்தில், 28 முறை சுழன்று சாதனை படைத்தாா்.
இவரது இந்த சாதனை இன்டா்நேஷனல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ், இன்டா்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’, ?வேல்ட்வயட் புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.