செய்திகள் :

ஆசியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவை?

post image

கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள்தொகை உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன் எதிரொலியாக சீனா, தாய்லாந்தில் உள்ள மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஹாங்காங்

ஹாங்காங் சுகாதார பாதுகாப்பு மையத்தின் தகவலின்படி, நகரத்தில் கரோனா வைரஸ் பரவும் விகிதம் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில், கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரிகள் அதிக மக்களிடம் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாத முதல் வார நிலவரப்படி, ஹாங்காங்கில் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நகரத்தில் 70 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், தொற்று பரவும் விகிதமும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது. மே முதல்வார நிலவரப்படி 14,200 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு தரவுகளை சிங்கப்பூர் சுகாதாரத் துறை வெளியிடுவது இந்த ஆண்டில் இதுவே முதல்முறை. மக்களிடையே குறைந்த அளவிலான எதிர்ப்பு சக்தியே உள்ளதாகவும், இதுவே தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணம் எனவும் சிங்கப்பூர் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளையில் தற்போது பரவிவரும் கரோனா வகையானது, ஊரடங்கு காலத்தில் இருந்ததைப் போன்று, அதிவேகமாகப் பரவக்கூடியதாகத் தெரியவில்லை அல்லது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து

மே 17ஆம் தேதி நிலவரப்படி தாய்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,030 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 16,000 அதிகமாகும். இதில் அதிக எணிக்கையிலான பாதிப்புகள், பாங்காக் (6,290), சோன் புரி (2,573), ரயோங் (1,680), நோந்தபுரி (1,482).

அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 39 வயதுடையவர்களாக உள்ளனர். இதனால், வயது முதியோர் உள்பட அனைத்துத்தரப்பினரும் தாமதமின்றி உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனா

சீனாவிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மே முதல் வார நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 சதவீதத்தில் இருந்து 16.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3.3 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதால், கடந்த கோடையில் இருந்த நிலைமை சீனாவில் மீண்டும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்தது. தற்போது 257 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நா... மேலும் பார்க்க

இலங்கை இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி

இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா நடத... மேலும் பார்க்க

நேரம் கடத்துகிறது ரஷியா

உக்ரைனில் போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷியா கடைப்பிடிப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நடைமுறைக்கு சாத... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்...! ஒரே ரிக்டர் அளவுகளில் தொடரும் அதிர்வுகள்?

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நி... மேலும் பார்க்க

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து... மேலும் பார்க்க