Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid |Imper...
கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது.
இந்தக் குவாரியில் சுமார் 150 அடி ஆழமுள்ள பகுதியில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூர், சிங்கம்புணரி தீயணைப்பு, மீட்புப் படையினர் பாறைக் குவியலில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், பாறைக் குவியலில் சிக்கி கணேஷ் (45), முருகானந்தம் (47), ஆறுமுகம் (53), அர்ஜித் (28), ஆண்டிச்சாமி (52) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திர ஓட்டுநரான ஒடிஸô மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜித் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் (47) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
ஆய்வின் போது, அவருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில், திருநெல்வேலியிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேரிட்ட கல் குவாரி பகுதிக்கு பொதுமக்கள் யாரையும் போலீஸôர் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கு போலீஸôர், பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து எஸ்.எஸ். கோட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.