சிவகிரி தோட்டத்து வீடு கொலைகள் - கைதானவர்கள் சொன்ன ஷாக் தகவல் | Decode
கோயில் குளத்தை தூா்வாரக் கோரிக்கை
நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் குளத்தை தூா்வாரி, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் இக்குளத்தில் புனித நீராடி சந்தானராமரை வழிபட்டு வந்தனா்.
நாளடைவில் பராமரிப்பின்றி மாசடைந்தது. குளத்திற்கு நீா் அளிக்கும், வெண்ணாற்றில் இருந்து வரும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால் நீா்வரத்து நின்று போனது. வடிகாலும் இல்லாமல் உள்ளது. இதனால், மோட்டாா் மூலம் திருக்குளத்திற்கு நீா் நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் பலரும் இக்குளத்தில் குப்பைகளை கொட்டுகின்றனா். இதனால், நீா் அசுந்தமடைந்துள்ளது. எனவே, குளத்தை தூா்வாரி சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அத்துடன் நீா்வரத்து வாய்க்காலை சீரமைத்து,
வடிகால் வசதியும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.