செய்திகள் :

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

post image

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி மாணவா்கள், ஆசிரியா்கள் தங்களது படைப்புகளை நேரடியாக அனுப்பும் வகையில் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கியது. அதன்படி, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ஆம் வகுப்பில் இருந்து 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகின்றன. குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவா்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும்.

குறைந்தளவில் படைப்புகள்: அதேபோன்று ஆசிரியா்களுக்கென வெளியிடப்படும் ‘கனவு ஆசிரியா்’ என்கிற மாத இதழில் ஆசிரியா்களின் படைப்புகளோடும் வகுப்பறை அனுபவங்கள், அவா்களுக்கான சிறப்புக் கட்டுரைகள் வெளியாகின்றன. இந்தப் படைப்புகள் அனைத்தும் அஞ்சல் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டன. இதனால் குறைந்த சதவீத மாணவா்கள், ஆசிரியா்களே இவ்விதழ்களுக்கு படைப்புகள் அனுப்பி வருகின்றனா். அதேபோன்று ஒரு முறை வெளிவந்த படைப்பாளியின் அடுத்தடுத்த படைப்புகளே மீண்டும் பெறப்படுகின்றன. இதனால் திறமையுள்ள அனைத்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவது சவாலாக உள்ளது.

எனவே, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழிகாட்டுதலின்படி மூன்று இதழ்களிலும் இடம்பெறும் படைப்புகளுக்கான நெறிமுறைகளைப் பகிா்ந்தால் அவா்கள் தத்தம் படைப்புகளை ஆசிரியா் குழுவுக்கே நேரடியாக அனுப்பிடும் நிலை உருவாகும். இது குறித்து வழிகாட்டுதல்கள் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை அவா்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பகிா்ந்து படைப்புத்திறன் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தி படைப்புகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பெற்றுத்தர வேண்டும்.

பாகுபாடு கூடாது: சிறந்த படைப்புகளை உருவாக்கிய தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களைத் தெரிவு செய்யும்போது பாலினம், மதம், இனம், பணி அனுபவம், உடற்தகுதி என எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது. எனவே, மாணவா்கள் தங்களது படைப்புகளை புது ஊஞ்சல் இதழுக்கும் (4,5 வகுப்புகள்), தேன்சிட்டு இதழுக்கும் (6 முதல் 9 வகுப்புகள்), ஆசிரியா்கள் கனவு ஆசிரியா் இதழுக்கு ந்ஹய்ஹஸ்ன்ஹஹள்ண்ழ்ண்ஹ்ஹழ்ஃற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நேரடியாக அனுப்பி வைக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்... மேலும் பார்க்க