செய்திகள் :

சென்னையை வென்றது ராஜஸ்தான்

post image

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 17.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் டெவன் கான்வே 10, உா்வில் படேல் 0 ரன்களுக்கு வெளியேறினா்.

அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே - ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது. இதில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் சோ்த்த ஆயுஷ் ஆட்டமிழந்தாா்.

5-ஆவது பேட்டராக ரவீந்திர ஜடேஜா களம் புக, அஸ்வின் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். அப்போது வந்த டெவால்டு பிரெவிஸ் விளாசத் தொடங்க, ஜடேஜா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தாா்.

அப்போது இணைந்த பிரெவிஸ் - ஷிவம் துபே கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. பிரெவிஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

துபே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, கேப்டன் தோனி 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அன்ஷுல் காம்போஜ் 5, நூா் அகமது 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் யுத்வீா் சிங், ஆகாஷ் மத்வல் ஆகியோா் தலா 3, துஷாா் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 188 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, வைபவ் சூா்யவன்ஷி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57, கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனா்.

ரியன் பராக் 3 ரன்களுக்கு வீழ, துருவ் ஜுரெல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 31, ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை தரப்பில் அஸ்வின் 2, காம்போஜ், நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உல... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார். ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி 20... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்... மேலும் பார்க்க

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில... மேலும் பார்க்க