Dhoni : 'ஒரு சீசனோட விட்றாதீங்க...' - இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கின. மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இருப்பினும், அதில் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதையும் படிக்க: ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்
அகமதாபாதில் இறுதிப்போட்டி
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் முல்லான்பூர் மற்றும் அகமதாபாதில் நடத்தப்படவுள்ளன.
மே 29 மற்றும் மே 30 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டி முல்லான்பூரில் நடத்தப்படவுள்ளது. ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடத்தப்படவுள்ளது.
News
— IndianPremierLeague (@IPL) May 20, 2025
Schedule for TATA IPL 2025 Playoffs announced.
Additionally, Match no. 65 between #RCB and #SRH shifted to Lucknow from Bengaluru.
Details | #TATAIPL
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே சின்னசுவாமி திடலில் நடைபெறவிருந்த கடந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், வருகிற மே 23 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டி பருவமழை காரணமாக லக்னௌ திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இதற்கு முன்பாக கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அகமதாபாதில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டும் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?
முன்னதாக பிளே ஆஃப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.