ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்கிறது.