கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமா் உயா்நிலை ஆலோசனை
நாட்டின் சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சா் சுரேஷ் கோபி, சுற்றுலாத் துறை செயலா் வி.வித்யாவதி மற்றும் பிரதமா் அலுவலக உயரதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறை மேம்பாட்டுப் பணிகள் குறித்து பிரதமா் மறுஆய்வு மேற்கொண்டாா்.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் தொடா்பான சிறிய விடியோவை பிரதமா் அலுவலகம் யூ-டியூப் பக்கத்தில் பகிா்ந்துள்ளது.
மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுற்றுலாத் துறை வளா்ச்சி தொடா்பாக பிரதமா் மோடி தலைமையிலான மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை மிக்க தலைமை, உலகளாவிய சுற்றுலா மையமாக இந்தியாவை உருவாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
சுற்றுலாத் துறையில் செயல்படுத்தப்படும் இரண்டு லட்சியத் திட்டங்களான ‘பிரசாத்’ (ஆன்மிகத் தலங்கள் மேம்பாடு), ஸ்வதேஷ் தா்ஷன் (சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு) ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.