மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!
ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில் அழைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெருந்துறை காவல் உபகோட்ட துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.