அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க |மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்