செய்திகள் :

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

post image

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் வீதி உலா நேற்று(திங்கள்) இரவு நடைபெற்றது.

இரவு 11. 30 மணியளவில் தேர் மீது எதிர்பாராதவிதமாக மின் கம்பி பட்டதில் தேர் தீப்பற்றி எரிந்தது. இதில் முழுவதுமாக தேர் சேதமடைந்தது.

மேலும் தேருடன் சென்ற ராமன்(20) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆதிகேசவன், சிவா, ஜானகிராமன் மற்றும் குப்பன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் உடல், உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர் விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | நீட் தேர்வில் தோல்வி பயம்: சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் பார்க்க

காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க