மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!
கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகான்டே. இவரது மனைவி ஜெயஸ்ரீ, இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவரது மனைவி ரேணுகா(34). இந்த தம்பதிக்கு திருமணமாகியும் வெகுநாள்களாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், மே 17ல் கிராமத்தின் அருகே உள்ள சாலையில் ரேணுகா தலையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். தன்னுடன் மோட்டர் சைக்கிளில் வந்தபோது சக்கரத்தில் சேலை சிக்கியதால் இறந்துவிட்டதாக சந்தோஷ் அவரது தந்தை காமண்ணா ஆகியோர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்று ரேணுகாவின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விபத்து நடந்திருப்பதற்கான எந்த ஆதாரங்களும் போலீஸாருக்கு கிடைக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ரேணுகாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதேநேரத்தில் கணவர் சந்தோஷ் அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இறுதியாக ரேணுவுக்குக் குழந்தை இல்லாததால் நானும் என் பெற்றோர்களும் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டுக் கொன்று, சேலையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூவம் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.