கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜாவில் நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 205/5 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக டன்சித் அகமது 59, டவ்கித் ஹிருதோய் 45, லிட்டன் தாஸ் 40 ரன்களை குவித்தார்கள்.
அடுத்து விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 19.5 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகம் வங்கதேசத்துக்கு எதிராக தனது முதல் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த அணியில் தொடக்க வீரர்கள் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். அதில் கேப்டன் முகமது வாசீம் 82 ரன்களும் முகமது ஜோகிப் 38 ரன்களும் அடித்தார்கள்.
இறுதியில் ஹைதர் அலி 6 பந்துகளில் 15 ரன்களை எடுத்து அசத்தினார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவையானபோது துருவ் பரஸ்கர் சிக்ஸர் அடித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும் போட்டியை வெல்ல காரணமாக அமைந்தார்.
இதன்மூலம் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 3-ஆவது டி20 போட்டி மே.21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
UAE vs Bangladesh, 2nd T20I - Sharjah:
— UAE Cricket Official (@EmiratesCricket) May 19, 2025
Relive the last over drama that unfolded at the iconic Sharjah Cricket Stadium as UAE stunned Bangladesh pic.twitter.com/IrkFvSN1Xz