10 கிலோ உடல் எடையைக் குறைத்த சர்பராஸ் கான்!
இந்திய வீரர் சர்பராஸ் கான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக 10 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.
இங்கிலாந்து எதிராக 2024ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கிய இந்திய வீரர் சர்பராஸ் கான் இந்தியாவுக்கு வெளியே நடந்த போட்டிகளில் விளையாடமல் இருக்கிறார்.
உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம் கிடைத்துள்ள சர்பராஸ் கான் மீது உடல் எடை கூடுதலாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது.
இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சென்று விளையாடவிருக்கிறது.
இந்நிலையில், கடுமையான உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்து தனது உடல் எடையில் 10 கிலோவை குறைத்துள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்தியா ஏ அணியில் சர்பராஸ் கான் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆங்கில ஊடகங்கள் தெரிவித்த தகவலின்படி வேகவைக்கப்பட்ட காய்கறிகள், இறைச்சிகளை எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது.
6 டெஸ்ட் போட்டிகளில் சர்பராஸ் கான் 371 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஒரு சதம், அரைசதம் அடங்கும். இரானி கோப்பை தொடரில் 222* ரன்கள் அடித்தது அசத்தினார்.
கோலி, ரோஹித் ஓய்வை அறிவித்ததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.