செய்திகள் :

"திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது!" - தொல்.திருமாவளவன்

post image

திருச்சி மாவட்டம், துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"திருச்சியில் 31-ம் தேதி நடைபெற இருந்த மதசார்பின்மை காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.

இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும். தி.மு.க இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது.

thol.thirumvalavan

கூட்டணி தொடருமா?

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை. அ.தி.மு.க, பா.ஜ.க இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால், அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

தற்போது, எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

Shashi Tharoor: 30 ஆண்டுகால ஐ.நா அனுபவம் டு காங்கிரஸ் சீனியர் தலைவர் - சசி தரூரை குறிவைக்கிறதா BJP?

பாஜக-வின் `ஆபரேஷன் சௌத்'தில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் காங்கிரஸின் சசி தரூர்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்... மேலும் பார்க்க

நீட் பயத்தால் மாணவன் தற்கொலை; 'ஒரே ஒரு முறை பெற்றோர்களை சிந்தித்துப் பாருங்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும், திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி... மேலும் பார்க்க

'நாடகங்களை விடுத்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்' - தமிழக அரசுக்கு இராமதாஸ் கண்டனம்

`நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பாஜக அமைச்சர் நமச்சிவாயத்தின் மனைவி வாங்கிய ரூ.21 கோடி நிலம் - நாராயணசாமி சொல்வதென்ன ?

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-ம் ஆண்டில் உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி ... மேலும் பார்க்க

'தேசிய கட்சிகளைத் தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகளால் ஆட்சி செய்ய முடியாது!' - கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் தேசிய கட்சிகளைத் தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்த்தி சிதம்ப... மேலும் பார்க்க

'புறக்கணிப்பு... அதிருப்தி... யுடர்ன்..!' - அண்ணாமலை அமைதியானதன் பரபர பின்னணி

கடந்த சில வாரங்களாக "அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை தி.மு.க-வை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக நான் நினைக்கவில்லை" என விமர்சனம் செய்து வந்தார், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. இந்தச்சூழலில்தான் தற்போ... மேலும் பார்க்க