மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!
இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.
புள்ளிப் பட்டியலில் அனைத்துத் துறை பங்குகளும் சரிவுடன் காணப்பட்டன. பெரிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன.
அதிகபட்சமாக சென்செக்ஸ் பட்டியலில் ஈடர்னல், எம்&எம், அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4.1% வரை சரிந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.98 புள்ளிகள் சரிந்து 81,186.44 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.06 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.55 புள்ளிகள் சரிந்து 24,683.90 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.05 சதவீதம் சரிவாகும்.