Vishal: 'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை' - தன்ஷிகாவைக் கரம் பிட...
ஹீரோ அறிமுகப்படுத்தும் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஹீரோ நிறுவனத்தின் விடா மாடல் ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது விற்பனையில் உள்ள விடா ஸ்கூட்டர்களான வி2 ப்ரோ, வி2 பிளஸ், வி2 லைட் ஆகிய மாடல்கள் ரூ. 74,000 முதல் ரூ. 1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மாடல்களின் விலை ரூ. 70,000-இல் தொடங்கும் என்றும் வருகின்ற ஜூலை மாதம் சந்தைக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மாதம்தோறும் சராசரியாக 7,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம், மாதம் சுமார் 13,000 முதல் 15,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.