செய்திகள் :

தங்கப் பனை விருது வென்ற டென்ஜெல் வாஷிங்டன்..!

post image

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் டென்ஜெல் வாஷிங்டனுக்கு தங்கப் பனை (பாம் டி’ஓர்) விருது அளிக்கப்பட்டது.

ஹாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைசாலியான டென்ஜெல் வாஷிங்டன் தற்போது ஹையெஸ்ட் டூ லோவெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஸ்பைக் லீ இயக்கிய இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மே.13 முதல் மே.24வரை இந்த விழா நடைபெறுகிறது.

70 வயதாகும் டென்ஜெல் வாஷிங்டன் 9 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் 2 முறை விருது வாங்கியுள்ளார். இவருக்கு இது முதல் தங்கப் பனைவிருது என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற பிறகு டென்ஜெல் வாஷிங்டன் கூறியதாவது:

இது எனக்கு முற்றிலும் ஆச்சரியமானது. நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறேன்.

என்னுடைய சகோதரனுடன் மீண்டும் பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவர் இன்னொரு அம்மாவின் வயிற்றில் பிறந்த எனது சகோதரர் போன்றவர். அதனால்தான் இங்கு (கேன்ஸ்) மீண்டும் வந்திருக்கிறேன்.

இந்த அறையில் இருக்கும் நாங்கள் நல்ல உடைகளை உடுத்தி படங்களை எடுக்கும் சலுகைகளைப் பெற்றிருக்கிறோம். அதற்காக சம்பளமும் பெறுகிறோம்.

அளவிட முடியாத அளவுக்கு நானும் எனது படக்குழுவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எனது இதயத்தின் அடியாளத்தில் இருந்து அனைவருக்கும் நன்றி சொல்கிறேன் என்றார்.

மும்பைக்குச் சென்ற தக் லைஃப் படக்குழுவினர்!

தக் லைஃப் படத்தின் படக்குழுவினர் புரமோஷனுக்காக மும்பைக்குச் சென்றுள்ளனர்.நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படத்... மேலும் பார்க்க

தக் லைஃப் பாடலில் சுகர் பேபி சர்ச்சையா? நாளை வெளியாகிறது!

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் கமல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான சுகர் பேபி உறவு பேசுபொருளாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அப... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி படத்தின் பெயரில் புதிய சீரியல்!

நடிகர் விஜய் சேதுபதி படத்தின் பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சின்ன திரையில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்கள், திரைப்படங்களின் பெயர்களிலேயே ஒளிபரப்பாகின்றன. ரசிகர்களின் மனதில் எளிமையாக தலைப்ப... மேலும் பார்க்க

வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!

வள்ளியின் வேலன் தொடர் விரைவில் முடியவுள்ளது. இத்தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பில் நாயகன் சித்துவும் நாயகி ஸ்ரேயாவும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களுடன் இதனைப் பகிர்ந்துள்ளனர்.ஜீ தமிழ் தொலைக... மேலும் பார்க்க

மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த்?

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் ப... மேலும் பார்க்க

மனம் வலிக்கிறது... இறுதி அறிக்கையை வெளியிட்ட ஆர்த்தி ரவி!

நடிகர் ரவி மோகனின் அறிக்கையைத் தொடர்ந்து ஆர்த்தி 5 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இணை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து வழங்கப்... மேலும் பார்க்க