செய்திகள் :

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

post image

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்களை, மாநிலம் முழுவதுமுள்ள மதரஸா-க்களின் பாடத்திட்டங்களில் இணைக்கப்படுவதாக உத்தரகண்ட் மதரஸா வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை, வெளியிட்டுள்ள அம்மாநில மதரஸா கல்வி குழுவின் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி, மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.

உத்தரகண்டில் செயல்பட்டு வரும் சுமார் 451 மதரஸா-க்களில், 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, முஃப்தி ஷாமூன் காஸ்மி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சூஃபி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர் குழுவுடன் சென்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், பிரதமர் மோடியின் தலைமையிலான, ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய ராணுவத்தை அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், தனது அறிவிப்பை வெளியிட்ட காஸ்மி, ராணுவப் படைகள் வெளிகாட்டிய வீரம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் மதரஸா மாணவர்களும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ”நாம் மதரஸா பாடத்திட்டங்களில் என்.சி.ஆர்.சி. பாடத்திட்டத்தை இணைத்துள்ளோம், அதன் மூலம் பிரதான கல்வியுடன் மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்த மாற்றம், கல்வி நிலையங்களில் உயர்தர கல்வியை வழங்கி வருகின்றது. மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய பாடங்களையும் இணைத்து அதன் மூலம் வருங்காலத் தலைமுறையினர் நம் நாட்டு ராணுவ வீரர்களின் துணிவு, வீரம், பலம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

மேலும், பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த ஒரு பாடத்தைச் சேர்ப்பதற்காக பாடத்திட்டக் குழுவின் கூட்டம் விரைவில் கூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன், இந்தப் புதிய முயற்சியை வரவேற்ற உத்தரகண்ட் வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷதாப் ஷாம்ஸ், இந்த உத்தரகண்ட் மாநிலம் வீரர்களின் நிலம் எனவும் அழைக்கப்படும் என்றும் நவீன மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி இங்கு பயிலவில்லை என்றால் வேறு எங்கு கற்றுக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க