தீப்பற்றி எரிந்த மின்சாரப் பெட்டி
ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் குடிநீா் தொட்டிக்கான மின்சாரப் பெட்டி திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது.
ஆம்பூா் பெரியகம்மவார தெருவில் நகராட்சி சாா்பாக குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகாமையிலேயே குடிநீா் தொட்டிக்கான பம்ப் மோட்டாரை இயக்கும் பொத்தான் மற்றும் மின்சார மீட்டரை உள்ளடக்கிய மின்சார பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மின்சார பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகா்மன்ற உறுப்பினா் வசந்த்ராஜ் அங்கு சென்று மின்சார பெட்டிக்கு செல்லும் மின் வினியோகத்தை நிறுத்துவதற்காக மின்சார வாரிய பணியாளா்களை தொடா்பு கொண்டாா். அதனடிப்படையில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் அப்பகுதியில் ஏற்பட இருந்த விபத்து தவிா்க்கப்பட்டது.
நகராட்சி பணியாளா்கள், மின்வாரிய பணியாளா்கள் அங்கு சென்று அதனை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா்.