ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்...
காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
திருப்பூர் அடுத்த காங்கயத்தில் மரத்தில் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் ஜானகி (வயது 42). இவரது கணவர் ராஜா (46), மூத்த மகள் ஹேமிநேத்ரா (15) மற்றும் இளைய மகள் மெளன ஸ்ரீ (10) ஆகியோருடன் சொந்த ஊரான கேரளத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் அரச்சலூருக்கு காரில் திரும்பியுள்ளார்.
காங்கயம் வழியாக அரச்சலூர் சென்றுகொண்டிருந்தபோது நத்தக்காடையூர் அருகே மரத்தில் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ராஜா, ஜானகி மற்றும் ஹேமிநேத்ரா ஆகியோர் சம்பவ உயிரிழந்தனர். இளைய மகள் மெளன ஸ்ரீ மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து நடந்த காரில் இருந்து ஏராளமான நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.