ரூ.26 கோடியில் வளா்ச்சி பணிகள் : ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம்
ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாதனூா் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ. வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
தீா்மானம் : ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் கட்ட ரூ. 5.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவிப்பது. ரூ.2.80 கோடியில் ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை பணிகள், கழிவுநீா் கால்வாய் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது,
ரவிக்குமாா் : பெரியாங்குப்பத்தில் ஏரி கால்வாய் , சுடுகாடு, ரயில்வே மேம்பாலம் வழியாக பெரியாங்குப்பம் வரை செல்ல சாலை ஏற்படுத்தி சீரமைத்து தரவேண்டும்.
செந்தில்குமாா் : காரப்பட்டு ஏரியை தூா்வாரி சீரமைத்து தர வேண்டும்.
காா்த்திக் ஜவஹா் : காட்டுகொல்லை அருகே வெள்ளகல் கானாறு பகுதியில் சுடுகாடு செல்ல சிறுபாலம் அமைத்து தர வேண்டும்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மிட்டாளம் மகாதேவன், சம்பங்கி, காா்த்திக், திருக்குமரன், ஜெயந்தி, பரிமளா, மஞ்சுளா, தீபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.