நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்
கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை பகுதியில் நேற்று கனமழை பெய்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றால அருவியில் இன்று நீர்வரத்து குறைவாக உள்ளபோதும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.