செய்திகள் :

Ajith: ``பொருளாதார காரணத்தால் என்னுடைய ரேஸிங் ஆசைக்கு என் பெற்றோர்கள்..'' - பகிர்கிறார் அஜித்

post image

அஜித்தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். ரேஸிங், சினிமா என சமீபத்தில் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியைப் பதிவு செய்திருந்தார் அஜித்.

அதைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருதையும் பெற்றிருந்தார்.

குட் பேட் அக்லியில்
குட் பேட் அக்லியில்

கடந்த சில வருடங்களில் பேட்டிகள் ஏதும் அளிக்காத அஜித் தற்போது அடுத்தடுத்து பேட்டிகளைக் கொடுத்து அவருடைய வாழ்க்கையின் சில முக்கியமான பக்கங்கள் குறித்துப் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் மாஷபிள் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவருடைய ரேஸிங் கரியரின் தொடக்கத்திற்கு அவரின் பெற்றோர்கள் அளித்த ஆதரவு பற்றி பேசியிருக்கிறார்.

அஜித் பேசுகையில், "நான் முதலில் பைக் ரேஸிங்கைத் தொடங்கினேன். ஏனெனில் அது மிகவும் மலிவானது.

எனக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருந்ததற்கு நான் மிகவும் பாக்கியசாலியாகக் கருதுகிறேன்.

ஆனால், என் தந்தை மிகவும் நேர்மையாக, ‘அஜித், இது மிகவும் செலவை உண்டாக்கும் விளையாட்டு. எங்களால் உனக்கு ஆதரவளிக்க முடியாமல் போகலாம்.

அஜித்
அஜித்

ஆனால், நீ உன் ஸ்பான்ஸர்களைக் கண்டுபிடித்து, அதற்கு ஒரு வழி கண்டால், முன்னேறு,’ என்று கூறினார்.

நான் பள்ளியை விட்டு வெளியேறியப் பிறகு என் பெற்றோர்கள் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தனர்.

அவர்கள், ‘படிப்பைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற வேண்டும். இல்லையெனில் வேலை செய்யத் தொடங்க வேண்டும். நேரத்தை வீணடிக்கக் கூடாது.’ என்றனர், நான் வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்தேன்," எனக் கூறியிருக்கிறார்.

உடல் எடைக் குறைப்பு; மறுமணம்; பெயர் மாற்றம் - கம்பேக் கொடுக்கிறார் 'புன்னகை தேசம்' ஹம்சவர்தன்!

'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்' ஆகிய திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹம்சவர்தன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிசந்திரனின் மகன். 1999 முதல் கிட்டதட்ட 2010 வரை சினிமாவில் கவனம்... மேலும் பார்க்க

Tourist Family : `மிக அற்புதமான படைப்பு!' - டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டிய ராஜமெளலி

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிக்குமாரின் கரியரில் அதிகம் வசூல் செய்த படங்களில் இப்படமும் ஒன்று என... மேலும் பார்க்க

Vishal: கிசு கிசுலாம் போதும் I'm going to marry Sai Dhanshika - திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்

நடிகை சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் விஷால். இன்று நடைபெற்ற 'யோகி டா' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் தகவலை விஷாலும், சாய் தன்ஷிகாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிறந்தநாளான ஆ... மேலும் பார்க்க

Vishal: 'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை' - தன்ஷிகாவைக் கரம் பிடிக்கும் விஷால்

நடிகர் விஷால் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் 'மதகஜராஜா' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்குப் பிறகு தன்னுடைய லைன் அப்களை விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் அத்திரைப்படங்கள் தொடர்பான... மேலும் பார்க்க