செய்திகள் :

உடல் எடைக் குறைப்பு; மறுமணம்; பெயர் மாற்றம் - கம்பேக் கொடுக்கிறார் 'புன்னகை தேசம்' ஹம்சவர்தன்!

post image

'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்' ஆகிய திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹம்சவர்தன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிசந்திரனின் மகன்.

1999 முதல் கிட்டதட்ட 2010 வரை சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ஹம்சவரதன் 2010-க்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.

Hamsavardhan
Hamsavardhan

தற்போது மோகனை வைத்து 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஶ்ரீ இயக்கத்தில் 'மகேஷ்வரா' படத்தில் நடித்து வருகிறார் ஹம்சவர்தன்.

இந்தப் படப்பிடிப்பில்கூட ஹம்சவரதனுக்கு சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியாகியிருந்தது.

புதிய படங்கள்!

ஹம்சவரதன் முன்னர், 'வடுகபட்டி மாப்பிள்ளை' படத்தில் நடித்திருந்த நடிகை ரேஷ்மாவைதான் அவர் திருமணம் செய்துக் கொண்டார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

தற்போது கேராளவைச் சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் திருமணம் சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இதை தொடர்ந்து கேரளாவில் கடந்த மே 18-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது.

Hamsavardhan
Hamsavardhan

இதுமட்டுமல்ல நடிகர் ஹம்சவர்தன் தன்னுடைய பெயரை லியோ ஹம்சவர்தன் என்றும் மாற்றியிருக்கிறார்.

சோகத்தில் மூழ்கியிருந்த ஹம்சவிர்தன் தற்போது தன்னுடைய கரியரின் அடுத்த சாப்டரை தொடங்கும் வகையில் உடல் எடையைக் குறைத்து இரண்டு புதிய படங்களை கமிட் செய்திருக்கிறாராம்.

அப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Ajith: ``பொருளாதார காரணத்தால் என்னுடைய ரேஸிங் ஆசைக்கு என் பெற்றோர்கள்..'' - பகிர்கிறார் அஜித்

அஜித்தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். ரேஸிங், சினிமா என சமீபத்தில் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியைப் பதிவு செய்திருந்தார் அஜித். அதைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் தி... மேலும் பார்க்க

Tourist Family : `மிக அற்புதமான படைப்பு!' - டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டிய ராஜமெளலி

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிக்குமாரின் கரியரில் அதிகம் வசூல் செய்த படங்களில் இப்படமும் ஒன்று என... மேலும் பார்க்க

Vishal: கிசு கிசுலாம் போதும் I'm going to marry Sai Dhanshika - திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்

நடிகை சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் விஷால். இன்று நடைபெற்ற 'யோகி டா' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் தகவலை விஷாலும், சாய் தன்ஷிகாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிறந்தநாளான ஆ... மேலும் பார்க்க