காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
இந்திய அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் காலமானார்.. அணுசக்தி துறையில் அவரது சாதனைகள்
பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருது வென்ற இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
எம்.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர். ஸ்ரீனிவாசன் என அழைக்கப்படும் மாலூர் ராமசுவாமி ஸ்ரீனிவாசன் 1930 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். மைசூரில் உள்ள இடைநிலைக் கல்லூரியில் அறிவியல் பிரிவில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இயற்பியல் மற்றும் இயந்திர பொறியியல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் அந்த பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை 1952-ல் முடித்துள்ளார். 1955 ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்த எம் ஆர் ஸ்ரீனிவாசன் அணுசக்தி ஆராய்ச்சியின் உச்சத்தை எட்டி இருக்கிறார்.
இந்திய அணுசக்தி துறையில் எம். ஆர் சீனிவாசனின் பங்கு குறித்து தெரிவித்த அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், "அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான டாக்டர் எம். ஆர். ஸ்ரீனிவாசன் காலமானார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அவர் மே 20- 2025 அன்று தனது 95 வயதில் காலமானார்.

டாக்டர் ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 1955 -ல் அணுசக்தித் துறையில் (DAE) சேர்ந்தார். மேலும், இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து தனது பணியைத் தீவிரமாகத் தொடங்கினார்.
ஆகஸ்ட் 1956 -ல் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பணியாக இருந்தது.
ஆகஸ்ட் 1959 -ல் இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
1967- ல் மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய பதவிகளை வகித்தார்.
1974 - ம் ஆண்டு அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984- ல் அணுசக்தி வாரியத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.

1987 -ம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) நிறுவனர்-தலைவராக ஆனார்.
அவரது தலைமையின் கீழ் 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயரிய விருதுகள் வழங்கப்பட்டது.
இந்திய அணுசக்தி துறையில் அவரின் பங்களிப்பு வருங்கால தலைமுறைகளால் எப்போதும் நினைவு கூறப்படும்" என்று தெரிவித்தனர்.