செய்திகள் :

டைரனோசொரஸ்: அழிந்துபோன மிருகத்தின் தோல் மூலம் ஆடம்பர பொருட்கள் தயாரிக்க திட்டம் - எப்படி சாத்தியம்?

post image

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த பிரமாண்ட மிருகமான டைரனோசொரஸ் ரெக்ஸ் (டைனோசரின் ஒரு இனமாகும்), கால மாற்றத்தால் தற்போது உயிருடன் இல்லை. டைரனோசொரஸ் (டி ரெக்ஸ்) மிருகத்தின் டிஎன்ஏவிலிருந்து பர்ஸ்கள் மற்றும் தோல்பைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் கூறியுள்ளது.

இது தொடர்பாக நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் சே கானன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லேப்-க்ரோன் லெதர் லிமிடெட் மற்றும் தி ஆர்கனாய்டு கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் டி-ரெக்ஸ் லெதரை உருவாக்கியுள்ளன.

இது எவ்வாறு சாத்தியமாகும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டி ரெக்ஸ் அழிந்து விட்டது, அதன் தோல் எப்படி கிடைக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.. அவர்களின் திட்டப்படி, அதிநவீன மரபணு மற்றும் புரதங்களை பயன்படுத்தி முற்றிலும் புதிய பொருட்களை உருவாக்க முடியும் என்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டி ரெக்ஸ் மற்றும் டைனோசர்களின் புதைபடிவங்களில் உள்ள கொலாஜன் (கொலாஜன் ஒரு முக்கிய கட்டமைப்பு புரதமாகும், இது உடலின் பல பாகங்களை ஒன்றிணைத்து வைத்திருக்க உதவுகிறது) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, MIT ஆராய்ச்சியாளர்கள் டைனோசர் கொலாஜன்களை பாதுகாக்கும் முறையை கண்டுபிடித்தனர். அதன்படி டி-ரெக்ஸ் கொலாஜன், அதன் DNA க்களை ஆய்வகத்தில் வளர்த்து, தன்மையை மேம்படுத்திய பிறகு டி-ரெக்ஸ் தோல்களை உருவாக்க முடியும் என்று பேராசிரியர் சே கானன் கூறுகிறார்.

தற்போது விலங்குகளை அழித்து அதன் மூலம் தோல் பொருட்களை உருவாக்குகின்றோம். இந்த சோதனை வெற்றியடைந்தால் பல விலங்குகள் அழிவிலிருந்து காப்பாற்றபடும் என்றும் கூறுகிறார். மேலும் டி-ரெக்ஸ் தோல் மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் பூமியில் எளிதில் மக்கும்படியாக இருக்கும் என கூறியுள்ளார்

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு முதன்மையான ஆடம்பரப் பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால் சில விஞ்ஞானிகள் இது இயற்கைக்கு மாறான செயல் என்றும் இதனை உருவாக்க முடியாது என்றும் அழிந்து போன விலங்கின் கொலாஜன் மூலம் அசலான உயிரின் (டிரெக்ஸ்) தோலை உருவாக்க முடியாது என்றும் கூறுகின்றனர் .

ஆகவே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன டைனோசர் தோல் பை விற்பனைக்கு வருமா? இதற்கான பதிலை வரும் காலம் தான் கூற வேண்டும்.

`அணு ஆயுத கதிர்வீச்சில் கரப்பான் பூச்சிகளால் தப்பிக்க முடியுமா?' - உண்மை என்ன?

போரின்போது பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்களின் கதிர்வீச்சிலிருந்து கரப்பான் பூச்சிகள் தப்பித்து உயிர் பிழைக்கும் தகுதி உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. உண்மையில் அணு கதிர்வீச்சை தாங்கும் சக்தி கரப... மேலும் பார்க்க

ஒலி அலையால் உடல் எடையைக் குறைக்க முடியுமா? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

பொதுவாக உடலைக் குறைக்க, உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு எனப் பல விஷயங்களைச் செய்வார்கள். ஆனால் ஒலி அலைகளால் உடலைக் குறைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பானிய ஆராய்ச்சியாள... மேலும் பார்க்க

உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆகும்?

உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காண... மேலும் பார்க்க

`மாம்பழம்' பழங்களின் அரசனாக இருப்பது ஏன்? மா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மாம்பழத்தை பழங்களின் அரசன் என வழங்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் சுவை உலகம் முழுவதும் மக்களை ஈர்ப்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் தன்னை சிறந்த பழமாக... மேலும் பார்க்க

மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியுமா?

மின்னல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உலகிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மின்னல் தாக்குதல் என்பது இயற்கையாகவே நடைபெறும் ஒரு விஷயமாகும். இந்த மின்னல் தாக்... மேலும் பார்க்க

விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமான போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனங்களும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்... மேலும் பார்க்க