பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை: முன்னாள் இந்திய பயிற்சி...
`அணு ஆயுத கதிர்வீச்சில் கரப்பான் பூச்சிகளால் தப்பிக்க முடியுமா?' - உண்மை என்ன?
போரின்போது பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்களின் கதிர்வீச்சிலிருந்து கரப்பான் பூச்சிகள் தப்பித்து உயிர் பிழைக்கும் தகுதி உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. உண்மையில் அணு கதிர்வீச்சை தாங்கும் சக்தி கரப்பான் பூச்சிக்கு உள்ளதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன ?
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா குண்டுகளை வீசியபோது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.
ஹிரோஷிமா நாகசாகியில் ஏற்பட்ட பேரழிவு மனித குலத்தில் ஏற்பட்ட பெரும் கரும்புள்ளி என்று வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்றனர்.
போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு பல ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் அணு ஆயுத கதிர்வீச்சில் இருந்து தப்பித்து கரப்பான் பூச்சிகள் உயிர் பிழைக்கும் தகுதி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Pestword.org இன் அறிக்கைப்படி உலகில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கரப்பான் பூச்சி இனங்கள் உள்ளன. முப்பது வகையான கரப்பான் பூச்சிகளே மனித வாழ்விடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கரப்பான் பூச்சிகள் மனிதர்களை விட கிட்டத்தட்ட 100 மடங்கு காலம் பூமியில் உயிர் வாழும் என்று AMDRO வலைதளம் தெரிவித்துள்ளது.
கரப்பான் பூச்சிகளின் உடல் அமைப்பு கடுமையான சூழ்நிலையும் தாங்கும் வகையில் உள்ளது. இன்னும் சொல்லபோனால் அணு ஆயுத மோதல் ஏற்படும்போது அதில் ஏற்படும் கதிர்வீச்சுகளைக்கூட தாங்கக்கூடிய தன்மை கரப்பான் பூச்சிகளுக்கு உள்ளது என்றும் அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சியின் உடல் அமைப்பு, கடுமையான அணு கதிர்வீச்சுகளைத் தாங்கக்கூடிய அளவிற்குப் பாதுகாப்பானதாக இருப்பதாக சில தகவல்கள் கூறப்பட்டாலும், அணு வெடிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் நோபல் பரிசு பெற்றவரான பேராசிரியர் டில்மேன் ரஃப் கரப்பான் பூச்சிகள் ஒரு அணுசக்தி பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்க முடியாது என கூறியுள்ளார்.

இது பேராசிரியர் டில்மேன் கூறுகையில் ”அணு வெடிப்புகள் உயிரினங்களை பல்வேறு வழிகளில் பாதிக்கின்றன.
செர்னோபில் அணு உலை விபத்து போன்ற ஒரு பேரழிவிலிருந்து கிடைக்கும் சான்றுகளின்படி பூச்சிகள் முதல் மண் பாக்டீரியாக்கள் வரை, பூஞ்சைகள் முதல் பறவைகள், பாலூட்டிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கரப்பான் பூச்சிகள் ஒரு அணுசக்தி பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்க முடியாது என கூறியுள்ளார்.