செய்திகள் :

உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆகும்?

post image

உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காண்டப்படும் காளான்தான் உலகிலேயே அதிக கசப்பு சுவை உள்ளது என்றும் அதற்கு காரணமாக வேதிப் பொருளையும் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக கசப்பு சுவை உள்ள காளான்கள் உண்ணத்தகுந்தவை அல்ல என்ற கருத்து பரவலாக நம்பப்படும், ஆனால் இந்த காளான் உண்பதற்கு பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளனர்.

Mushroom (Representational)
Mushroom (Representational)

இந்த காளானின் பெயர் அமரோபோஸ்டியா ஸ்டிப்டிகா (Amaropostia stiptica) இதனை 'கசப்பு ப்ராக்கெட் பூஞ்சை' என்றும் அழைக்கின்றனர்.

கசப்பு சுவைக்கு காரணமான வேதிப்பொருள்!

ஆய்வாளர்கள் இந்த காளானில் இருந்து 3 சேர்மங்களை பிரித்தெடுத்து அவை மனித சுவை ஏற்பிகளில் எப்படி வினைபுரிகின்றன என்பதை ஆராய்ந்தனர்.

இதில் உள்ள  oligoporin D என்ற வேதிப் பொருளை ஒரு நபர், ஒரு கிராம் அளவில் உட்கொண்டால் அவர் அதன் கசப்பு சுவையைக் கரைக்க 16,000 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும் என்கின்றனர்.

இந்த வேதிப்பொருளை உணவுப்பொருட்களில் விஷமிருப்பதைக் கண்டறிய பயன்படுத்த முடியும் என்கின்றனர்.

இந்த கண்டிபிடிப்பால் என்ன பயன்?

இந்த காளானின் கண்டுபிடிப்பு, மனித பரிணாமத்தில் எப்படி கசப்பு சுவையை கண்டறியும் உணரிகள் தோன்றின, அதன் தேவை என்ன? என்பதைக் கண்டறியும் ஆய்வுக்கு உதவலாம் என்கின்றனர்.

மேலும் வருங்காலத்தில் உணவு தொழில்நுட்ப ஆய்விலும் இது உதவக் கூடும் என்கின்றனர். உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தாவரவங்களின் கசப்பு சுவையை பற்றி ஆராய்ந்திருந்தாலும் காளான் போன்ற பூஞ்சை வகைகளில் கவனம் செலுத்தியவர்கள் மிகவும் குறைவு.

கசப்பு சுவைக்கான உணர்மிகள் வாயில் மட்டுமல்லாமல் வயிறு, குடல், இதயம் மற்றும் நுரையீரலிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் கசப்பு சுவை மனித உடல் மீது கொண்டிருக்கும் உறவை ஆராய்வது அவசியம் என்கின்றனர். இதற்கு இந்த காளானின் கண்டுபிடிப்பு உதவக்கூடும்.

மரங்களில் வளரும் இந்த கசப்பு காளானை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தால் ட்ரை பண்ணுவீங்களா?

`மாம்பழம்' பழங்களின் அரசனாக இருப்பது ஏன்? மா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மாம்பழத்தை பழங்களின் அரசன் என வழங்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் சுவை உலகம் முழுவதும் மக்களை ஈர்ப்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் தன்னை சிறந்த பழமாக... மேலும் பார்க்க

மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியுமா?

மின்னல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உலகிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மின்னல் தாக்குதல் என்பது இயற்கையாகவே நடைபெறும் ஒரு விஷயமாகும். இந்த மின்னல் தாக்... மேலும் பார்க்க

விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமான போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனங்களும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்... மேலும் பார்க்க

Alien: K2-18b கிரகத்தில் உயிர்கள் நிறைந்த கடல்; அறிவியலாளர்கள் முன்வைக்கும் முக்கிய ஆதாரங்கள் என்ன?

ஏலியன்கள் இனியும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வரும் பூதங்கள் அல்ல. பூமியிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அறிவியல... மேலும் பார்க்க

"12,500 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்குத் திரும்பிய Dire Wolf" - அழிந்த உயிரினத்தை மீட்டது எப்படி?

12,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஓநாய் இனம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வெற்றிகரமாக மறு உருவாக்கம் அடைந்த உயிரினம் இதுதான் என்கின்றனர். அமெரிக்கா... மேலும் பார்க்க

தும்மலின் போது கண்களை திறந்து வைக்க முடியாதா?! ஏன் தெரியுமா?

தும்மல் என்பது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாக காற்றை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும்.பொதுவாக கண்களை மூடி கொண்டு தான் தும்மல் ஏற்படும். ஏன் கண்களைத் திறக்கக் கொண்டு தும்மல் முடியவில்லை எப்போதாவது ய... மேலும் பார்க்க