Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை ...
தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு!
தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கத்திரி வெயில் தொடங்கிய நாள் (மே 4) முதலே தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஒருசில நாள்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகபட்சமாக வெப்பம் பதிவானது.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றுக் குவிதல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வெப்பத்தை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
மேலும் கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதியில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று(மே 20) ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று(மே 20) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வடபழனியில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க ரூ. 10 கோடியில் உயர்நிலை மேம்பாலம்