காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 5-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று(மே 19) காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,233 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று(மே 20) காலை வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108. 82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 109.33 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 77.46 டிஎம்சியாக உள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 0.81 அடி உயர்ந்துள்ளது. மேட்டூரில் பெய்த மழை அளவு 35.20 மி.மீ. ஆகும்.
இதையும் படிக்க: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!