தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 8,720-க்கும், சவரன் ரூ. 69,760-க்கும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 8,755-க்கும், சவரனுக்கு ரூ. 280 உயா்ந்து ரூ. 70,040-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 8,710-க்கும் சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 108-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 குறைந்து ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!